| பயிர் பாதுகாப்பு :: சக்கரைவள்ளி கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             கரியழுகல்  நோய்: 
அறிகுறிகள்: 
              
                
                  - கிழங்கின் தண்டுகள் மற்றும் காம்புகளில்  நீரினால் ஊரி புள்ளிகள் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறத்தில் தோன்றும். இறுதியில்  தண்டுகளில் நீர் கோத்து குழைந்து கொடிகள் காய்ந்துவிடும்.
 
                  - வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு கொடிகள்  குழைந்துவிடும். ஆனால் சில சமயங்களில் முழு செடியே அழியக் கூடும்.
 
                  - பூஞ்சான் மூலம் கரியழுகல் நோய் கிடங்கில்  உள்ள கிழங்குகளில் பாதிக்கக்கூடும். சி சமயங்களில் கரு அழுகல் நோய் மற்றும் ஐவா கரு  அழுகல் நோயினாலும் தாக்கக்கூடும்
 
                  - கிடங்கில் சேமித்தக் கிழங்கின் அறிகுறியாக  கிழங்கில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாதல், உறுதியாகவும்,  ஈர வெப்பநிலையில் அழுகுதல், முன்நிலையிலேயே கிழங்கின் தோல் பகுதிகள் பாதித்துவிடும்
 
                  - அழுகல் நோய் அதிகரித்து நுண்ணுயிரிகள்  கிழங்கின் நடுபகுதி வரை பாதித்துவிடும். நோய் தாக்கப்பட்ட திசுக்களின் இரண்டு ஓரங்களிலும்,  தெளிவாக நோயின் அறிகுறிகள் காணலாம்.
 
                  - நன்கு அழுகிய ஓரங்களில் உள்ள திசுக்கள்  சிவப்பு கலந்து பழுப்பு நிறங்களில் மாறிவிடும் மற்றும் மற்றொரு ஓரத்தில் தாக்கிய நுண்ணுயிரி  கரு நிறத்தில் வளர்ந்து கொண்டு இருக்கும்.
 
                  - கரியழுகல் நோய் முழு வேர் பகுதியினை  தாக்கி, இறுதியில் உலர்ந்து கடினமாகி மற்றும் காய்ந்து விடும்.
 
                 
 
              கட்டுப்பாடு: 
              
              
                - அறுவடைக்கு பின்பு ஏற்படக் கூடிய கரியழுகல்  நோயிலிருந்து கிழங்கினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 
               
 
              
             | 
              
              
              
             | 
           
         
  |